பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என அரசு சொல்வது ஏமாற்று வித்தையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளர்.மேலும் கூறுகையில்,
வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது அடிப்படை நாட் சம்பளமா என்பது பற்றி விபரிக்கப்படவில்லை.
இது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
எனவே, இதுவொரு ஏமாற்று வித்தை. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.