தமது வெளியிணைப்பு பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உரிய சுகாதார நடைமுறைகளை தமது நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தெரிவித்துள்ளது.
ஏனைய நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவலை பூச்சிய நிலையில் பேணுவதற்கு தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, வெளியிணைப்பு பணியாளர்கள் 14பேருடன் இணைந்து செயற்பட்ட ஏனையோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
தொற்றுக்கு உள்ளானவர்கள் சுகாதாரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குறிப்பிட்டுள்ளது. நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றனர்.
எனவே நாடு முழுவதும் உள்ள லங்கா மருத்துவமனைகள் மற்றும் லங்கா மருத்துவமனைகளின் கண்டறியும் மையங்களில் தமது சேவைகளை அச்சமின்றி பயன்படுத்துமாறு லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.