தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் தொற்று அல்லாத நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள வீடுகளில் நபர்கள் இறப்பது குறித்து கவனம் செலுத்தி ஜனாதிபதி இந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் குறித்த பிரதேசங்களில் விசேட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவ சேவையையும் நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை இறந்த 109 பேரில் 42 பேர் வீடுகளிலும், வீடுகளிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தொற்று அல்லாத நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.