பிரித்தானியாவில் சோதனைகளுக்காக சென்ற 18 வயது பெண் திடீரென்று கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அவருக்கே ஒரு வித ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
Dion Seaborne என்று அறியப்படும் 18 வயது இளம் பெண், பிரித்தானியாவின் வேல்ஸில் Newport பகுதியில் இருக்கும் Royal Gwent மருத்துவமனையில் உடல் சோதனைகளுக்காக காத்திருந்தார்.
அப்போது மருத்துவமனை கழிப்பறைக்கு சென்ற போது, திடீரென்று குழந்தை பெற்றெடுத்தார். முற்றிலும் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தான் கர்ப்பமாக இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறிகளுமே இல்லை, நான் வித்தியாசமாக உணவில்லை.
நான் எடை போடவில்லை. உண்மையில் என்னைக் கண்ட பலரும் நான் எடை குறைந்துவிட்டேன் என்றே சொன்னார்கள். சவுத் வேல்ஸின் Griffithstown-ல் வசித்து வரும் இவர், நான் இதைப் பற்றி முற்றிலும் சிந்தித்து கூட பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், அந்த நேரத்தில் என்னால், அவசர உதவிக்கான பட்டனை அழுத்த முடியவில்லை, இதனால் கழிப்பறையில் இருந்து செவிலியரின் உதவிக்காக என்னால் கத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இது குறித்து அவர் உடனடியாக தன்னுடைய காதலான Callum Morris-யிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அவர் ஆச்சரியமடைந்ததாகவும், அதன் பின் சிரிப்பை அவரால் மருத்துவமனைக்கு வந்த பின் நிறுத்த முடியவில்லை என்று Dion Seaborne கூறியுள்ளார்.