தமிழகத்தில் வளர்ப்பு நாய்க்கு விஷம் வைத்து கொடுத்துவிட்டு, இரண்டு மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கட்டட ஒப்பந்தக்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு வளர்மதி(38) என்ற மனைவியும், அகிலா ((20) மற்றும் ப்ரீத்தி (17) என்று இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், அருண்பாண்டியனுக்குத் தலையில் கட்டி இருந்ததால், அவர் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதன் காரணமாக அகிலா தன் குழந்தைகளுடன் மதுரையில் இருக்கும் மலைச்சாமிபுரம் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அருண்பாண்டியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் கடந்த மாதம் சிகிச்சை பலனிளிக்காமல் உயிரிழந்தார்.
இவர் உயிரிழந்ததையடுத்து, அவரது மனைவி வளர்மதி, மகள்கள் அகிலா மற்றும் ப்ரீத்தி ஆகிய மூவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
அவர்கள் மட்டுமின்றி, வளர்த்து வந்த செல்ல நாயையும் விட்டு விட மனமில்லாமல் அதற்கும் விஷம் வைத்து கொன்றுள்ளனர்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில், எங்க அப்பாவ விட்டுட்டு எங்களாள இருக்க முடியல.
நாங்கள் அப்பாகிட்ட போறோம், அருண் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் எங்களுக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூடாது. அருண் சம்பாதித்த சொத்தை உரிமை கொண்டாட அருண் குடும்பத்து உரிமை இல்லை.
யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, தங்களிடம் உள்ள நகை மற்றும் பணங்களை குறிப்பிட்டு வீட்டில் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த ஒத்தக்கடை காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்