கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தகவலையும் புகைப்படங்களையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி பகிர்ந்துள்ளார்.
மேலும் கடமையில் இருந்தவர்களும் அவர்கள் பகுதிகளில் ஒளி ஏற்றி வழிபாடு செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.