நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வங்கி ஓயா தோட்டத்தில் யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து வந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட யுவதியோடு தொடர்பை பேணிய 21 வயதுடைய யுவதிக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 6 ஆயிரத்து 309 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















