இந்தியா தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டு இருந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா.
பிக் பாஸ் முடிந்த பின்னும் இவர்களைப்பற்றி கசியாத தகவல்கள் இல்லை எனலாம்.
இந்த நிலையில், லொஸ்லியா மற்றும் கவின் ஆகிய இருவரும் காதலித்தார்கள் என தொடர்ச்சியாக வெளியான செய்தியின் உண்மை தன்மை வெளியாகியது.
நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது
இவ்வாறான நிலையில், லொஸ்லியாவிற்கும், கவினுக்கும் இடையில் உண்மையில் காதல் இருந்ததா என்பது தொடர்பில் உண்மையான தகவலொன்று கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, கவின் லொஸ்லியாவை உண்மையிலேயே காதலிக்கும் வகையில் நடந்துக்கொண்டுள்ளார்.
கவினை லொஸ்லியா காதலிக்காத போதிலும், கவின் மீது நம்பிக்கை வைத்து லொஸ்லியா அவருடன் பழகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது பெயரை பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக கவின் இவ்வாறான நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து, பின்னரான காலத்தில் கவின், லொஸ்லியாவுடனான தொடர்புகளை முறித்துக்கொண்டுள்ளார்.
லொஸ்லியாவின் அழகு கலை நிபுணராக பணியாற்றிய யுவதியொருவருடன், கவினுக்கு தற்போது காதல் மலர்ந்துள்ளதாக அறிய முடிகின்றது.
லொஸ்லியாவுடனான தொடர்புகளை கவின் துண்டித்துள்ளதை அடுத்து, அவர் நட்புறவு ரீதியில் ஏமாற்றமடைந்துள்ளார்.
எனினும் தற்போது லொஸ்லியாவின் தந்தை உயிரிழந்ததை அடுத்து இலங்கை வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




















