யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் கொடிகாமம் நாகநாதன் வீதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத் தக்க நபர் வீதியில் பயணித்தபோது நிலை தடுமாறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் அங்கு சென்றதுடன் அவரை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
எனினும் குறித்த நபர் ஏற்கனவே உயிழந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.


















