வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்துவருகின்றது.
அந்தவகையில் யாழ்ப்பாண நல்லூர் ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் பெருமளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை நாட்டைவிட்டு புரெவி புயல் கடந்து சென்றுள்ளபோதும் தொடர்ந்தும் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை நீடிக்குமென வளிமண்டலவிய திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




















