அமெரிக்காவில் தனது இரண்டு சகோதரிகளை பணத்துக்காக விற்பனை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Memphis-ஐ சேர்ந்தவர் Ezekil Rhodes (23). இவர் தனது 17 மற்றும் 16 வயதுடைய இரண்டு சகோதரிகளை பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த 17 வயது இளம்பெண் அங்குள்ள டாமர் அவென்யூவில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் அவரிடம் விசாரித்த போது தன்னையும் தனது சகோதரியையும் Ezekil வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அவர் கூறினார்.
இதை தொடர்ந்து Ezekil-ஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் Ezekilக்கு ஜாமீன் தொகையாக $20,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.