மன்னார் வளைகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி ராமநாதபுரம் மாவட்டத்தின் அருகே மன்னார் வளைகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் குறிப்பிடப்பட்டுள்ளது.