இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.
பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய ஆண் ஒருவரும், தெமடகொட பிரசேத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும், பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், வெல்லம்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் 53 மற்றும் 66 வயதுடைய சிறைக் கைதிகள் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.