இன்னும் நான்கு வருடங்களில் புதிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அது நிச்சயம் நடக்கும் எனவும், அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
ராஜபக்சவினர் தற்போது தோல்வியடைந்துள்ளனர். சஜித் பிரேமதாச சித்தி பெற்று விட்டார். நாட்டில் தற்போது சர்வாதிகார ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ராஜபக்சவினருக்கு வாக்களித்த மக்களுக்கு அரசாங்கத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படி குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த அரசாங்கம் இந்த நாட்டில் உருவாகவில்லை எனவும் திலிப் வெத ஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.