மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து சிகிச்சை பெற்று வந்த போதே இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் கொரோனாவுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில்,களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வளாகம், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பெற்று வந்த விடுதி என்பன கிருமித்தொற்று நீக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சனிக்கிழமை (05) புதிய தொற்றாளர்கள் உட்பட கிழக்கில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது.