இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவை கலைப்பதென ஜனாதிபதி எடுத்த முடிவு, அரசிற்குள்ளேயே மோதலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது அதிருப்தியை, கடிதம் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைப்பது அரசின் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிற்கு முரணானது, ஆணைக்குழுவை கலைப்பது தொடர்பான முடிவை பிரதமரே எடுக்க முடியுமென கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.