பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரியாக விஜே மகேஸ்வரி செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 60 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதுவரை வேல்முருகன், ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டு 13 பேர் மீதமிருக்கின்றனர்.
இவர்களில் ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி என 7 பேர் இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இருக்கின்றனர்.
இவர்களில் ஒருவர் இன்று நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுவார். இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி மகேஷ்வரி பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் மகேஸ்வரி, ஆச்சரியமான நிகழ்வுக்கு காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே சீரியல் நடிகர் அஸீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram