அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதற்காக 30 பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொதுப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறும் பேருந்து நடத்துனர்கள், சாரதிகள் மீது நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடமும், போக்குவரத்து அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.