தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம – அட்டுலுகம பகுதியிலுள்ள வீடொன்றில் ஆணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளா நிலையில், அவரது சகோதரியே இந்த கொலையை செய்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் கூரிய ஆயுதமொன்றினால் தனது சகோதரனை குத்தி கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவத்தில் 31 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கொலைக்கான காரணம் என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக கூறிய பண்டாரகம பொலிஸார், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















