பிரபல திரைப்பட நடிகரும், நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக, நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
உலகில் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, அதன் பின் அதில் இருந்து மீண்ட அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மகளும், நடிகையுமான வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/varusarath5/status/1336248093847638017




















