இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மற்றுமொரு ஆபத்தான நோய் தொற்று பரவி வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, நாச்சாதுவ, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் இபலோகம ஆகிய பகுதிகளில் இந்த நோய் பரவியுள்ளது.
லீஷ்மேனியாசிஸ் என்னும் இந்த ஆபத்தான நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் 500 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உலகில் மனிதர்களை பாதிக்கும் தொற்று நோய்களில் லீஷ்மேனியாசிஸ் ஒன்பதாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லீஷ்மேனியாசிஸ் என்பது ஒரு ஒட்டுண்ணி நோயாகும். இந்த ஒட்டுண்ணி பொதுவாக சேற்றில் வாழும் ஈக்களில் வாழ்கிறது.
உலகில் 98 நாடுகளை சேர்ந்தவர்கள் இதுவரையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நோய் தொற்று தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று இந்த மாதம் 15ஆம் திகதி 9 மணி முதல் 12.30 வரை அநுராதபுரம் விஜயபுர பகுதியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.