அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் பார்திவ் படேல் அறிவித்துள்ளார்.
35 வயதான பார்திவ் படேல் இதுவரை 25 டெஸ்ட், 38 ஒருநாள், இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடி 1706 ரன்கள் எடுத்தள்ளார்.
விக்கெட் கீப்பராக 93 கேட்சுகள், 19 ஸ்டம்பிங் செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் 139 போட்டிகளில் விளையாடியுள்ள பார்திவ் படேல் 2848 ரன்கள் குவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடைசியாக பார்திவ் படேல் பெங்களூர் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய இளம் விக்கெட் கீப்பராக பார்திவ் படேல் திகழ்கிறார், 17 வயது மற்றும் 152 நாட்களில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு அறிவித்துள்ள பார்திவ் பட்டேலுக்கு கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
— parthiv patel (@parthiv9) December 9, 2020




















