அதிகபட்ச பாதுகாப்புடன் சிறைச்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கிறது எனச் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
புதிய சிறைச்சாலை முழுமையான பல வசதிகளுடன் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை மாற்று இடம் ஒன்றிற்கு நகர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எந்த இடத்திற்கு வெலிக்கடை சிறைச்சாலை மாற்றப்படுமென்பதைக் குறித்துக் குறிப்பிடவில்லை.
இந்த திட்டத்திற்காக சுமார் 250 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சிறைச்சாலையில் விளக்கமறியல், புனர்வாழ்வு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகை என்பன அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே வெலிக்கடை சிறைச்சாலை ஹொரனை பிரதேசத்திற்கு மாற்றுவதற்கு ஆட்சியிலிருந்த அரசாங்கம் திட்டமிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.




















