பெங்காலி நடிகை ஆர்யா பனர்ஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை அவரது தெற்கு கொல்கத்தா இல்லத்தில் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
33 வயதான அவர், அவரது மூன்றாவது மாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது உடல் படுக்கையறையில் கிடந்தது.
பல பாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார். ‘த டர்ட்டி பிக்சர்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டிருந்தது.
‘எல்.எஸ்.டி: லவ் செக்ஸ் அவுர் தோகா’ (2010) மற்றும் ‘தி டர்ட்டி பிக்சர்’ (2011) உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருந்தார்.
அவர் மும்பையில் மொடலிங் துறையிலும் பணியாற்றினார்.
காலையில் அழைப்பு மணி மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்காததால், அயலவர்கள் சந்தேகமடைந்து பொலிசாருக்கு அறிவித்தனர்.
பொலிசார் வீட்டுக்குள் நுழைந்த போது, அவர் சடலமாக காணப்பட்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், தடயவியல் குழு அவரது அறையில் இருந்து மாதிரிகள் சேகரித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.



















