கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காலி மாவட்டத்தின் ல் 7 கிராமங்களுக்கு கடுமையான பயணக்தடை விதிக்க சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பகுதியில் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு பயணக்தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் வெனுர கே.சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி மிலித்துவ, கோன்கஹ, தலாபிடிய, தங்கெதர கிழக்கு, தெத்தூகொட வடக்கு, தெத்தூகொட தெற்கு மற்றும் மகுலுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது..
எனவே, குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமற்ற காரணத்திற்காக வீட்டில் இருந்து வெளியேற முடியாது எனவும் வைத்தியர் வெனுர கே.சிங்காரச்சி மேலும் கூறியுள்ளார்.



















