2009 ல் தமிழினம் அழிக்கப்படும்போது வவுனியாவில் முஸ்லிம்கள் பட்டாசு கொழுத்தியதை நாம் மறக்கவில்லை என சிறிரெலோ இளைஞரணி தலைவரான கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
சஹாரானுக்காக குரல் கொடுத்த மெளலவி வவுனியாவில் போராட்டமாம் என்னையா புதுசா இருக்கு என்று யாரும் சிந்திக்க வேண்டாம்.
ஐயா மெளலவி அவர்களே உங்களுடன் நான் நல்ல முறையில் நட்பாக இருந்தவன் ஆனால் என்று நீர் சஹ்ரானுக்கா குரல் கொடுத்தீரோ அன்று தெரிந்தது உங்கள் மன குமுறல்
இன்று உங்கள் இனம் சார்ந்த கொரோனா தொற்றுள்ளானவர்களின் ஜனாசாக்களை (பூதவுடலை) தகனம் செய்வதற்கு எதிராக இன்று வவுனியா பள்ளி முன் போராட்டம் அதுவும் ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால் இன்று நீங்கள் இந்த பள்ளி முன் நின்று சொன்ன வாக்கியங்களை யோசித்து பாருங்கள் உங்களுக்கே நியாயமா ?
“உரிமைக்காக போராடிய பிரபாகரன்” என்கிறீர்களே வெட்கமாக இல்லையா இதனை இந்த பள்ளி முன் நின்று கூற..? அத்துடன் முள்ளிவாய்க்கால் பற்றியும் கதைத்துள்ளீர்களே இது தான் நீங்கள் நாளுக்கு நாள் தொப்பியை மாற்றி கொள்வீர்களா..? என்றும் அவர் காட்டமாக கூறியுள்ளார்.
இதே பள்ளிவாசல் முன் முள்ளிவாய்க்காலில் எங்கள் இனம் செத்துக்கொண்டிருக்க இராணுவத்தின் வெற்றியை பட்டாசு கொழுத்தி கொண்டாடிய உங்கள் இனம் கொண்டாடியதை நாம் இன்னமும் மறக்கவில்லை காலங்கள் கடந்தாலும் உங்கள் சாரார் செய்தவைகள் அதுவும் வவுனியாவில் நாம் மறப்போமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
இத்தனை வியாக்கியானம் கதைக்கும் நீங்கள் இன்றுவரை உங்கள் காத்தான்குடி பள்ளியில் இரத்த கறையை வைத்திருந்து அதனுள் மதராசா பாடசாலையை நடாத்திறா வருகிறார்களே..? இது எந்த விதத்தில் நியாயம் ? என கேள்வி எழுப்பிய அவர், இதனால் தானே ஒரு சஹாரான் மற்றும் அல்ல இன்னமும் பல சஹரான்கள் உருவாக வழி வகுக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இன்ன்மும் இன்னமும் நாம் ஏமாற தயாராக இல்லை உங்கள் அரசியலை நீங்கள் செய்யுங்கள் எங்கள் முன் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் எனவும் சிறிரெலோ இளைஞரணி தலைவரான கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.



















