நடந்துமுடிந்த பாராளமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க க்ருணாவுடன் இணைந்து வேலை செய்தவர்களை சாணக்கியனின் பங்களாவில் சுமந்திரன் நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.
நடந்துமுடிந்த தேர்தலில் கருணவுடன் இணைந்து கல்முனை தொகுதியின் வாக்கை முழுமையாக குறைத்த பாக்கியசெல்வன்- புவிதரன் இந்த சந்திப்புக்கு தலைமை தாங்கியுள்ளார்.
பாக்கியசெல்வன் – புவிதரன் (புவி) நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக முழுமையா தோற்கடிப்பதற்கு வேலை செய்ததை யாவரும் நன்கறிவர் இப்படிப்பட்டரை சுமந்திரன் சந்திப்பது மக்கள் மத்தியில் ஒரு முரனை ஏற்படுத்துவதாக, அம்பாறையில் உள்ள கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கல்முனை நகர் பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன்னர் சிரேஸ்ர தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை சி.ஐ.டி உடன் சென்று கொள்ளையிட்ட நபரும், தமிழ்தேசியத்திற்கு எதிராக செயற்பட்டவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் என்பதுடன் அவரே தற்போது சுமந்திரனின் அம்பாறை மாவட்ட முகவர்.
ஒட்டுமொத்தத்தில் வடக்கு கிழக்கு தமிழ்தேசியத்திற்கு , தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எதிரானவர்களை அணிசேர்ப்பதில் சுமந்திரன் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிரான ஆளணி சேர்க்கும் முகவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















