நாட்டின் சுற்றுலாத்துறையை மீண்டும் புத்துயிர் பெற செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கும் நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றதாக தெரியவருகிறது.
இந்த நடவடிக்கையின் கீழ் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறையை திறந்து விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்து இருக்கிறது.
எனினும் நாட்டின் தெற்கு பகுதி மற்றும் கிழக்கு, வடமேற்கு பகுதிகளில் மாத்திரம் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது என அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.
இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் கீழ் இடம்பெற்றிருக்கிறது.
இதன்போது இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார ஒழுங்கு விதிகளை விரைவில் தயாரிக்குமாறு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 500 பில்லியன் ரூபாய்கள் சுற்றுலா துறையில் இருந்து மட்டமாக எதிர்நோக்கேப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வரவழைக்கப்பட உள்ளார்கள்.
மத்தள வானூர்தி தளத்தின் ஊடாக நாட்டுக்குள் வரவழைக்கப்படும் அவர்கள் 58 விருந்தகங்களில் தங்க வைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக நாட்டின் தென்பகுதி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையின் விருந்தகங்கள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன.
இலங்கைக்கு வரவழைக்கப்படும் சுற்றுலா பயணிகள் முதல்வாரத்தில் கரையோர பிரதேசங்களில் மாத்திரமே நடமாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதனை கண்காணிக்கும் முகமாக முழுமையான இராணுவத்தினர் உட்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏனைய பிரதேசங்களுக்குள் பிரவேசித்து விடக்கூடாது என்பதை கண்காணிப்பதற்காகவே இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சென்று விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த இராணுவத்தினரின் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




















