இலங்கையில் நேற்று மேலும் இரண்டு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் நாட்டில் மொத்த உயிரிழப்பு 149 ஆக உயர்ந்தது.
அதன்படி நிமோனியா காரணமாக டிசம்பர் 11 ம் திகதி கொழும்பு 15 ஐச் சேர்ந்த 55 வயது ஆண் ஒருவர் முல்லேரியா மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்,
அதேசமயம் இம்புல்கொடவில் வசிக்கும் 66 வயதுடைய மற்றொரு ஆண், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடுமையான நீரிழிவு மற்றும் கோவிட் -19 நிமோனியா காரணமாக டிசம்பர் 10 ஆம் திகதி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.


















