அமெரிக்காவில் இரண்டு மிருகக்காட்சி சாலைகளில் இருந்த 3 பனிச் சிறுத்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கெண்டக்கி மற்றும் லூயிஸ்வில் மிருகக் காட்சி சாலையைச் சேர்ந்த பனிச் சிறுத்தைகளுக்கு சுவாச நோயின் அறிகுறி தென்பட்ட நிலையில், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்று அறிகுறியற்ற ஊழியரால் 3 பனிச்சிறுத்தைகளுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என மிருகக்காட்சி சாலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


















