ஜப்பான் சிறுமியைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞனின் சகோதரியை திருமணம் செய்யவிருந்த நபர் தாக்குதலுககு இலக்காகியுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்களால் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பான் சிறுமி கடத்தப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேய அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த சிறுமியின் தாயின் இலங்கை காதலனின் குழுவால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்