மேலும் 3 மரணங்கள் நேற்று (13) பதிவாகியது.
இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம்(12) மரணமடைந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 10ஐ (மருதானை/ மாளிகாவத்தை) சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (12) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியாவுடன் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்தள பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (12) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை மற்றும் இரத்தம் விசமடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அநுராதபுரம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (12) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலையினால் ஏற்பட்ட இருதய செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.