மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் மதுரையில், தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்த நிலையில், முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒரு வாக்குறுதி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வருகின்ற தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டு கொண்டு தேர்தலை சந்திக்க உள்ளன.
இந்நிலையில் கமல்ஹாசன் மதுரையில் தனது முதல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். மதுரையில் அவர் சென்ற இடத்தில் எல்லாம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்காக. மதுரை வந்த அவர், மேல மாசி வீதியில் தொண்டர்கள் மத்தியில் பிரசார பயணத்தை தொடர்ந்தார். திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தை ஆரம்பித்த போதும், அவர் பேசவில்லை.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், தொண்டர்கள் மற்றும் ரசிகளை பார்த்து கையசைத்தவாறு வாகனத்தில் ஊர்வலமாக சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் உற்சாகமாக குரல் எழுப்பினர்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மதுரையை 2-வது தலைநகரமாக. மாற்ற ஆசை பட்டார். அதை நாங்கள் செய்வோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுரையை 2-வது தலைநகரமாக மாற்றுவோம். மீண்டும் ஒரு புரட்சிக்கு தயாராக வேண்டும். அதன் ஆரம்பம் தான் இந்த விழா என தொண்டர்கள் என கூறினார்.