பிரான்சில் நள்ளிரவில் நேரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி, சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடி விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றதால், பொலிசார் 135 யூரோ அபராதம் விதித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பிரான்சில் மக்கள் ஒன்றாக கூட வேண்டாம், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று அரசால் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு Marseille மாவட்டத்தின் 14 ஆம் வட்டாரத்தின், இங்குள்ள boulevard de Plombières பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் விருந்து விழா இடம்பெற்றது. இதில் 500 பேர் வரை கலந்துகொண்டிருந்தனர்.
விருந்து விழாவில் கலந்து கொள்ள இருவருக்கு 150 யூரோக்கள் கட்டணம் அறவிடப்பட்டிருந்தது. விருந்தில் கலந்துகொள்பவர்களுக்கு மதுபானங்களும் வழங்கப்பட்டது. இந்த விருந்து விழா சமூக வலைத்தளங்கள் ஊடாக நேரடியாக ஒளிபரப்பட்ட்டது.
விழாவில் கலந்துகொண்டவர்களில் அனேகமானோர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இதையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நள்ளிரவு 1.30 மணி அளவில் சம்பவ இடத்திற்கு பொலிசார் அதிரடியாக நுழைய, அங்கிருந்த அனைவரும் அலறி அடித்து தப்பி ஓடினர்.
இருப்பினும், அவர்களில் பலரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
அவர்களில் பலருக்கு 135 யூரோக்கள் தண்டப்பணம் அறிவிக்கப்பட்டது. உள்ளிருப்பு சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதால், இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.