வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெல்லிப்பழை கல்விக் கோட்டத்திற்குள் உள்ளடங்கும் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்
இதனடிப்படையில், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில் கல்விக் கோட்டத்துக்கு உள்ளிட்ட 33 பாடசாலைகளும், தெல்லிப்பழை கல்விக் கோட்டத்துக்கு உள்பட்ட 40 பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.