மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியிலுள்ள, தேசியவாத தென்னிலங்கை அரசுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
புதியதொரு அணுகுமுறையையும் அரசியல் மொழியையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் புத்திஜீவிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றில் நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பௌத்தர்களின் அமோக ஆதரவினை பெற்று, ஆழமான சிங்கள தேசியத்துவத்துடன் தற்போது ஆட்சியமைத்துள்ள அரசுடன் பேசுவதற்கு தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமையும் முக்கியமானதாக காணப்படுவதாக எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.