படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி சென்ற இலங்கை அகதியொருவர் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வருண்ராஜ் ஞானேஸ்வரன் (18) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், மனஅழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தான் தங்கியிருந்த Sale பகுதியிலிருந்து மெல்பேர்னுக்கு வந்த வருண்ராஜ், கடந்த 5ஆம் திகதி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.