இம்முறை பண்டிகைக் காலத்தை குடும்பத்தினருடன் மாத்திரம் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பண்டிகையை விமர்சையாக கொண்டாட முடியாது. குடும்பத்தினருடன் மாத்திரம் கொண்ட வேண்டும்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை நூற்றுக்கு நூறு வீதம் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
வார இறுதி நாட்களில் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்லும் பயணங்களைள முடிந்தளவு குறைத்துக் கொள்வது அவசியமாகும்.
அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே செல்வதனை மட்டுப்படுத்த வேண்டும்.
குழுவான இணைந்து செயற்படுவதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு அது காரணமாகிவிடும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


















