30 நிமிடங்களுக்கு மேல் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகள் திடீரென முடங்கிப் போயுள்ளன.
இதன்காரணமாக யூடியூப், ஜிமெயில், பிளேஸ்டோர் உள்ளிட்டவை செயல்படாமல் போய்விட்டது.
இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #googledown, #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களது குறைகளை பதிவிட்டு வருகின்றனர்.
செல்போனில் மட்டுமல்லாது கணினியிலும் கூட கூகுளின் செயல்பாடுகள் தடைபட்டன.
சர்வர் பிரச்சினை காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என பலரும் கருதுகின்றனர்.




















