நேற்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று (15) காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உடுவிலை சேர்ந்த இருவர், தெல்லிப்பழை, சண்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்த தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மருதனார்மடம் சந்தை உப கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.



















