உலகில் இருக்கும் முக்கியமான பெருநிறுவனங்களில் 20 லட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு சீனா தான் காரணம், அந்த நாடு தான் நோயை பரப்பி வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி உலகை ஆள்வதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும், இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் தன்னுடைய இராணுவ பலத்தை கூட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.உலகத்தின் மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் சுமார் இருபது லட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ரகசியமாகப் பணிபுரிந்து வருகிறார்கள் என்று பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால் பெயர்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.
அந்த நிறுவனங்களின் பட்டியலில் தயாரிப்புத் துறையில் போயிங் மற்றும் வோக்ஸ்வேகன். மருந்துத் தயாரிப்பில் பிபைசர் மற்றும் அஸ்ட்ராசனேகா, வங்கிகளில் ஏ.என்.இசட் மற்றும் ஹெச்.எஸ்.பி.சி ஆகியவையும் அடங்கும்.
குறிப்பாக ஹெச்.எஸ்.பி.சி மற்றும் ஸ்டாண்ட்டர்ட் சார்டட் ஆகிய இரு வங்கிகளில் மட்டும் 700-க்கும் மேற்பட்டசீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
கூடுதலாக இத்தகைய மேற்கத்திய நிறுவனங்களில் 79,000 சீன கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகள் செயல்பட்டு வருவதும், இதன் உறுப்பினர்கள் அனைவரும் சீன அதிபரான ஜி சின்பிங்கிற்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது.


















