மீரிகம – கீனதெனிய பிரதேசத்தில் தமது தாயின் மரண வீட்டில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மதுபானம் அருந்திக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பிரதேசத்தில் நபர் ஒருவர் வழங்கிய ஸ்பிரிட் வகையான பானம் ஒன்றை பருகிய போதே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மதுபானத்தை பருகிய மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் அவர்கள் இவ்வாறு மதுபானம் பருகியுள்ள நிலையில் உயிரிந்தவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் 47 வயதுடைய சகோதரர்களாகும்.
வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் வழங்கிய ஸ்பிரிட் வகையான பானத்தை பருகியமையினால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


















