தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைரமுத்து, இன்று காலை திடீரேன சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், இதய நோய் பிரச்சனைக்காக உள்நோயாளியாக வைரமுத்து அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின.
இச்செய்தி திரையுலகத்தினரிடம் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் சற்று கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரது உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
வைரமுத்து வழக்கமான பரிசோதனைக்காக தான் மருத்துவமனை சென்றதாக அவரது உதவியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.




















