பிரித்தானியாவில் 12 வயது சிறுவன் இறந்து கிடந்த சம்பவத்தில், சிறுவனின் புகைப்படம் முதன் முறையாக வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவ தொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த சனிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு மேல், Lincolnshire-ன் Boston-ல் இருக்கும் Fishtoft கிராமத்தில் Roberts Buncis என்ற 12 வயது சிறுவன் சடலமாக கண்டுபிடிக்கபப்ட்டான்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக Lincolnshire பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தற்போது 14 வயது மதிக்கத்தக்க சிறுவனும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, Lincoln Crown நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பொலிசார் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வரும், ஜனவரி 11-ஆம் திகதி அன்று நடைபெறவுள்ளது.
மேலும், இதற்கு முன்பாக கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞன் மேலதிக நடவடிக்கை இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாக Lincolnshire பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். பிறந்த நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் சிறுவன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
மகனை இழந்து தவிக்கும் Roberts Buncis குடும்பத்திற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது.
மேலும், இது குறித்து துப்பறியும் கண்காணிப்பாளர் Martyn Parker, இது ஒரு மோசமான சம்பவம் ஆகும். இந்த சிறுவனின் மரணத்தின் சூழ்நிலைகளை உன்னிப்பாக விசாரிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
இந்த விசாரணையை தேவையான ஏதேனும் தகவல் உள்ள நபர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Freiston சாலை மற்றும் Woodthorpe சந்திப்பை உள்ளடக்கியுள்ள வெளிப்புறமாக இருக்கும் சிசிடிவி காட்சிகள் இருந்தால், பொலிசாரை தொடர்பு கொள்ளுங்கள், குறிப்பாக டிசம்பர் 11-ஆம் திகதி இரவு 8 மணி முதல் டிசம்பர் 12 காலை 10 மணி வரை Wing Drive மற்றும் Alcorn Green ஆகிய பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் பொலிசார் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.



















