ஜேர்மனியில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளதன் காரணம் அலட்சியம்தான் என்று கூறியுள்ளார் ஜேர்மன் ஆய்வக தலைவர்.
நேற்று பெர்லினில் பேசிய Robert Koch நிறுவனத்தின் தலைவரான Lothar Wieler, ஜேர்மனியில் கொரோனா தொற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், அது தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலைமை இன்னும் மோசமடையும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ள Wieler, அப்படியானால் அந்த அதிகரித்த கொரோனா தொற்றையும் அதன் பின்விளைவுகளையும் எதிர்கொள்வதும் கடினம் என்றும் கூறியுள்ளார்.
நாளொன்றிற்கு புதிதாக 12,000 முதல் 30,000 பேருக்கு புதிதக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதாகவும், நவம்பரை விட டிசம்பரில் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலரது அலட்சியம்தான் இதற்கு காரணம் என்று கூறும் Wieler, புதிதாக தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை குறைந்தே ஆகவேண்டும் என்றும், மக்கள் தொடர்புகளை மிகவும் குறைத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.