உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த தீவாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் எஸ்கேப் (Escape) நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.
எஸ்கேப் (Escape) நிறுவனம் அவுஸ்திரேலியாவின் முதல்தர சுற்றுலா நிறுவனமாகும்.
அது விடுறை விடுதி, விசேட கொடுக்கல் வாங்கள், சுற்றுலா ஆலோசனை உட்பட பல விடயங்கள் தொடர்பான தகவல்களை எஸ்கேப் நிறுவனம் வழங்குகின்றது.
ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் எஸ்கேப் நிறுவனத்தினால், சுற்றுலா பயணிகளை தெளிவுப்படத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதற்கமைய இலங்கை முதலாவது சுற்றுலா பயணிகளுக்கான நாடாக எஸ்கேப் நிறுவனம் அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு லோன்லி பிளானட் மூலம் உலகின் முன்னணி இடமாக இலங்கை பெயரிடப்பட்டது. ஆனால் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக நாட்டின் சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும் தற்போது நிலைமை மாறி வருகிறது.
இந்த முறை சுற்றுலா பயணிகளால் தான் இலங்கைக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணம் மற்றும் ஓய்வெடுப்பதற்காக இலங்கை முதல் நாடாக உள்ளது.