யாழ்ப்பாணத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்களில் நடத்திவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சுமன் என்றழைக்கப்படும் சந்தேகநபர் ஓமந்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோவில்டியில் தனது போட்டிக்குழு ரவுடியான தனுரொக் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்தமை, ரவடி தனுரொக்கின் நீர்வேலி நண்பனின் வீடு புகுந்து அவரையும், தாயாரையும் வெட்டி காயப்படுத்தியமை, யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக அரச ஊழியரை வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட பல வாள்வெட்டு குற்றச்சம்பவங்களின் பிரதான சந்தேகநபராக சுமன் குறிப்பிடப்பட்டுள்ளார்.