புதிய அரசியலமைப்பிற்கும் வாய்ப்பில்லையென அரச தரப்பு பிரமுகர் ஒருவர் கூறி, இரா.சம்பந்தனை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 11ஆம் திகதி வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபாநாயகரின் இல்லத்தில் நடந்த தேனீர் விருந்தில் இந்த சம்பவம் நடந்தது.
வரவு செலவு திட்ட வாக்களிப்பின் பின் சபாநாயகர் இல்லத்தில் தேனீர் விருந்து நடந்தது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேசையொன்றில் இரா.சம்பந்தனும், த.சித்தார்த்தனும் அருகருகே இருந்த கதிரையில் உட்கார்ந்திருந்த போது, அமைச்சர் டக்ளஸ் அங்கே வந்திருந்தார். பின்னர் சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன வந்தார். அவர், த.சித்தார்த்தனிற்கு அருகில் இருந்த கதிரையில் உட்கார்ந்தார்.
தினேஷை கவனித்த இரா.சம்பந்தன், “புதிய அரசியலமைப்பு எப்பொழுது வரும்“ என கேட்டார்.
தற்போது, அவர் உடல் தளர்ந்துள்ளதால் அவர் கேட்டது, தினேஷிற்கு புரியவில்லை. தனக்கும், சம்பந்தனிற்கும் நடுவில் உட்கார்ந்திருந்த த.சித்தார்த்தனிடம், “அவர் என்ன சொல்கிறார்?“ என வினவியுள்ளார். சம்பந்தன் கேட்டதை, சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
உடனே, நமுட்டு சிரிப்புடன்- யாருக்கும் தெரியாது என்ற பொருள்பட- இரண்டு கைகளையும் விரித்து, அண்ணாந்து மேலே பார்த்துள்ளார்.
தினேஷின் பதில் இரா.சம்பந்தனை அதிர்ச்சியடைய வைத்தது.


















