இலங்கையில் சிறைச்சாலை கொத்தணியில் மேலும் பலருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று மாத்திரம் 63 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூவர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும், 60 பேர் கைதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 56 ஆண் கைதிகளும், 4 பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.
இதையடுத்து சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை ஆயிரத்து 189 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


















