மார்ஷல் தீவில் கைவிடப்பட்ட படகு ஒன்றில் இருந்து கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பசிபிக் தீவு நாடான மார்ஷல் தீவில் கைவிடப்பட்ட படகு ஒன்றில் 649 கிலோ எடையுள்ள கொகைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 80 மில்லியன் டொலர் ஆகும். அதாவது இலங்கை மதிப்பில் 14944800000 ரூபா ஆகும்.இந்த போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது.
இந்த போதைப்பொருளை சுமந்து வந்து கரை ஒதுங்கிய படகு, ஐலுக் அட்டோல் என்ற இடத்தில் உள்ளூர்வாசி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் அந்த படகை நகர்த்த முயற்சித்து அது முடியாமல் போய் உள்ளது.
மத்திய அல்லது தென்னமெரிக்க நாடொன்றிலிருந்து போதைப்பொருளை ஏற்றியபடி, இந்த படகு ஒரு வருடத்துக்கு மேலாக நகர்ந்து வந்திருக்கக்கூடும் என மார்ஷல் தீவு சட்டமா அதிபர் ரிச்சர்ட் ஹிக்சன் தெரிவித்தார்.


















